"கார்பெவாக்ஸ்" கொரோனா தடுப்பூசி - விரைவில் அவசரகால ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள "கார்பெவாக்ஸ்" கொரோனா தடுப்பூசிக்கு இம்மாத இறுதிக்குள் அவசர கால ஒப்புதல் கிடைக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கார்பெவாக்ஸ் கொரோனா தடுப்பூசி - விரைவில் அவசரகால ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு
x
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மார்டனா, ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளைப் பயன்படுத்த அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த பயாலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கியுள்ள "கார்பெவாக்ஸ்" தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை முடிவடைந்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் கோரி, ஓரிரு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கலாம் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பூஸ்டர் டோஸாக இதனைப் பயன்படுத்துவதற்கான சோதனைக்கும் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்குப் பிறகு, இந்தியாவிலே உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது தடுப்பூசி, "கார்பெவாக்ஸ்" என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்