லா பல்மா எரிமலை வெடிப்பு - சாம்பல்களால் மூடப்பட்ட ஆய்வகம்/ஆறாய் ஓடும் லாவா குழம்பு

ஸ்பெயின் நாட்டில் லா பல்மா எரிமலை வெடிப்பால் ஆய்வகம் சாம்பல் குவியலால் மூடப்பட்டது. கட்டடங்களின் மேல் பகுதியில் படிந்திருக்கும் சாம்பல் தூசுகளை தீயணைப்பு வீரர்கள் அகற்றி வருகின்றனர்.
லா பல்மா எரிமலை வெடிப்பு - சாம்பல்களால் மூடப்பட்ட ஆய்வகம்/ஆறாய் ஓடும் லாவா குழம்பு
x
ஸ்பெயின் நாட்டில் லா பல்மா எரிமலை வெடிப்பால் ஆய்வகம் சாம்பல் குவியலால் மூடப்பட்டது. கட்டடங்களின் மேல் பகுதியில் படிந்திருக்கும் சாம்பல் தூசுகளை தீயணைப்பு வீரர்கள் அகற்றி வருகின்றனர். லா பல்மா எரிமலை வெடிப்பானது 6 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், தொடர்ந்து சீற்றம் தீவிரமாகி வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். "டே ஆஃப் த டெட்" என்றழைக்கப்படும் இறந்தவர்களுக்கான நினைவு நாளை முன்னிட்டு மக்கள் கல்லறைகளில் படிந்திருந்த சாம்பல் படலங்களை அகற்றினர். எரிமலை சீற்றத்தால் வெளியேறும் லாவா குழம்பு ஆறாய் ஓடும் நிலையில், மேலெழும்பும் கரும்புகை மேகங்களுடன் ஒன்றாக கலக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்