கருக்கலைப்பு சட்டம் தொடர்பான பிரச்சினை: போப்-ஐ சந்திக்க உள்ள பைடன்

கருக்கலைப்பு சட்டம் தொடர்பான பிரச்சினை சம்பந்தமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போப் பிரான்சிசைச் சந்திக்க உள்ளார்.
கருக்கலைப்பு சட்டம் தொடர்பான பிரச்சினை: போப்-ஐ சந்திக்க உள்ள பைடன்
x
அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கும் சட்டம் டெக்சாசில் அமலுக்கு வந்தது. இதற்கு பெண்கள் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பி பெரும் போராட்டங்கள் வெடித்தன. அதே சமயம் இதை ஏற்க முடியாது என்று அதிபர் உட்பட பல தரப்பினரும் உறுதி அளித்தனர். இந்நிலையில், பல கிறித்துவ அமைப்புகள் இதற்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன. இந்நிலையில், கருக்கலைப்பு உரிமைகள் தொடர்பான சர்ச்சையில் ஜோ பைடனின், முரண்பட்ட நிலைப்பாட்டிற்காக அவர் மீது பல தரப்பினரும் அதிருப்தியில் இருந்த நிலையில், பைடன் போப் பிரான்சிசை சந்திக்க உள்ளார். கருக்கலைப்பை தான் தனிப்பட்ட முறையில் எதிர்த்தாலும் வெளிப்படையாக மக்கள் மீது அதைக் திணிக்க முடியாது என்று பைடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்