சிகாகோ காவலர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் - பணி நீக்கம் செய்யக் கூறும் ஜோ பைடன்

அமெரிக்காவின் சிகாகோ நகரில், காவல் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.
சிகாகோ காவலர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் - பணி நீக்கம் செய்யக் கூறும் ஜோ பைடன்
x
வருடத்திற்கு சுமார் 3,000 துப்பாக்கி சூடுகள் நடைபெறும் சிகாகோ நகரில்,13,000 காவல் துறையினர் பணியாற்றுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் குற்றங்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. சிகாகோ நகரின் அரசு ஊழியர்கள் அனைவரும் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. அதுவரை 2 வாரங்களுக்கு ஒரு முறை கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள காவலர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சுமார் 4,300 காவலர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள பதிவு செய்ய மறுத்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை 21 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்