மஞ்சள் நதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள் குறித்து அதிபர் ஆய்வு
சீனாவின் 2வது மிகப்பெரிய நதியான மஞ்சள் ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை அதிபர் ஜி ஜின்பிங் ஆய்வு செய்தார்.
மஞ்சள் நதியானது சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள கிங்ஹாய் திபெத் பீடபூமியில் இருந்து வட சீனாவின் லோயஸ் பீடபூமி வரை ஓடுகிறது. நதியின் படுகை சீன நாகரீகத்தை வளர்த்ததால் அது தாய் நதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் மஞ்சள் நதியில் செயல்பட்டு வரும் டெல்டா சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையத்தை அதிபர் ஜி ஜின் பிங் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது நதிப்படுகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.
Next Story