கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமித்ஷா பார்வையிடுகிறார் - பாதிப்பு தொடர்பாக அதிகாரிகளோடு ஆலோசனை
உத்ரகாண்ட் மாநிலத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் பார்வையிட்டு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக
நைனிதா, சம்பவாட், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஏராளமானோர் மாயமாகியுள்ளதால் தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ளார். டேராடூன் விமான நிலையத்திற்கு வந்த அமித்ஷாவை உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் டாமி நேரில் சென்று வரவேற்றார். இதனையடுத்து கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டரில் பயணம் செய்து அமித்ஷா இன்று பார்வையிட உள்ளார். மேலும், வெள்ள பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
Next Story