நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வு: சப்தங்களை பதிவு செய்யும் ரோவர்

செவ்வாய் கிரக ஆய்வுக்காக நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர், அங்கிருக்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது.
நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வு: சப்தங்களை பதிவு செய்யும் ரோவர்
x
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய்க்கு அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.  அதில் பொருத்தப்பட்டு இருக்கும் மைக்ரோபோன், செவ்வாய் கிரகத்தில் பதிவாகும் சத்தங்களை அனுப்பி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் சரளை கற்களில் ரோவர் ஏறும் போதும், அங்கிருக்கும் கற்களை ரோவர் கதிர்வீச்சு மூலமாக உடைத்த போதும் எழுந்த சத்தத்தை பதிவு செய்து அனுப்பியுள்ளது. இவ்வாறு ரோவர் அனுப்பிய 5 மணி நேரத்திற்கும் மேலான பதிவுகளை சேமித்து வைத்திருப்பதாகவும், இவை அனைத்தும் அடுத்தக்கட்ட ஆய்வுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்