ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு - 100க்கும் அதிகமானோர் உடல் சிதறி பலி

ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், 100 க்கும் அதிகமானோர் உடல் சிதறி பலியான துயரம் அரங்கேறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு - 100க்கும் அதிகமானோர் உடல் சிதறி பலி
x
ஆப்கானிஸ்தானின் குன்டூஸ் மாகாணத்தில் உள்ள மசூதியில், பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை நாட்களில் தொழுகை நடத்துவதற்காக, ஏராளமானோர் மசூதிக்கு வரும் நிலையில், இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.குண்டு வெடிப்பின் போது மசூதியில் இருந்த பெரும்பாலானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், அமெரிக்க ராணுவப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவமாக இது கருதப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், மனித வெடிகுண்டு மூலம் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, துப்பாக்கி ஏந்திய தலிபான் வீரர்கள், பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதுவரை இந்த கோரத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ஐ.எஸ். அமைப்புக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் இது என்பதால், ஆப்கன் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.  



Next Story

மேலும் செய்திகள்