சவுதியில் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு: ஏமன் உள்நாட்டுப் போரின் எதிரொலி

சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தின் மீது, யேமேனைச் சேர்ந்த ஹூத்தி பிரிவினர், ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
சவுதியில் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு: ஏமன் உள்நாட்டுப் போரின் எதிரொலி
x
சவுதி அரேபியாவில் சன்னி பிரிவினர் பெரும்பான்மையினராக உள்ளனர். சுமார் 15 சதவீதத்தினர் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள், ஷியாக்கள் வசிக்கும் பாரசீக வளைகுடா பகுதிகளில் அதிக அளவில் உள்ளன. சவுதியில் உள்ள ஷியாக்களை ஈரான் தூண்டி விட்டு, அவர்கள் தனியாக பிரிந்து சென்றால், இந்த எண்ணெய் வயல்களை இழக்க நேரிடும் என்று சவுதி அரேபியா பெரிதும் அஞ்சுகிறது. 

யேமேனில் ஷியாக்கள் ஆட்சியை கைபற்றினால், அண்டை நாடான சவுதியில் உள்ள ஷியாக்களுக்கு பெரிய அளவில் ஆயுத உதவிகள் கிடைத்து, சவுதியிலும் ஒரு உள்நாட்டுப் போர் உருவாகி விடும் என்று சவுதி ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

இதன் காரணமாக, யேமேனில் ஷியா பிரிவினர், ஆட்சியை பிடிப்பதை தடுக்க, சவுதி அரேபியா தலைமையிலான சன்னி அரேபிய நாடுகள் நேரடி ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறன. இவர்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. ஈரானிற்கு ரஷ்யா முழு ஆதரவை அளித்து வருகிறது.

2015 முதல் சவுதி அரேபியா, ஹூத்தி படையினர் மீது வான்வெளித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் ஏராளமான பொது மக்களும் பலியாகியுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சவுதியில் உள்ள எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலைகள், விமான நிலையங்கள் மீது ஹூத்தி பிரிவினர் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்