வேதியியலுக்கான நோபல் பரிசு - இரு விஞ்ஞானிகள் பகிர்வு

2021 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு இரு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதியியலுக்கான நோபல் பரிசு - இரு விஞ்ஞானிகள் பகிர்வு
x
சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை நோபல் கமிட்டி அறிவித்து வருகிறது.

மருத்துவம், இயற்பியலை தொடர்ந்து வேதியியலுக்கான நோபல் பரிசை கமிட்டி அறிவித்திருக்கிறது.

ஜெர்மனி விஞ்ஞானி பெஞ்சமின் லிஸ்ட், பிரிட்டன் விஞ்ஞானி டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக கமிட்டி தெரிவித்துள்ளது.

வேதியியல் மூலக்கூறுகளை உருவாக்குவதில் புதிய முறையை கண்டுபிடித்ததற்காக அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வேதிவினைகளை ஊக்கப்படுத்துவதில் பயன்படுத்தப்படும் வினையூக்கிகளில் புதிய முறையை இவர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு தனித்தனியாக இவர்கள் கண்டுபிடித்த முறை, மருந்து தயாரிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களது வினையூக்கி, ஆக்சிஜன், நைட்ரஜன், கந்தகம், பாஸ்பரஸ் தனிமங்களை கொண்டது என்றும் இது சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் பரிசு தொகை 8 கோடியே 50 லட்சம் ரூபாயை பகிர்ந்து கொள்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்