"20.70 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்"

இந்தியாவில் விதிமுறைகளை மீறியதாக, ஆகஸ்ட் மாதம் மட்டும், சுமார் 20 லட்சத்து 70 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
20.70 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
x
"20.70 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்"

இந்தியாவில் விதிமுறைகளை மீறியதாக, ஆகஸ்ட் மாதம் மட்டும், சுமார் 20 லட்சத்து 70 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருவரின் கணக்கு மூன்று கட்டங்களாக ஆராயப்படும் என்றும்,அதன்படி பதிவு செய்தல், செய்தி அனுப்புதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்குகள் முடக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.ஆகஸ்ட் மாதத்தில், பாதுகாப்பு சிக்கல் உட்பட பல வகைகளில் தீங்கு விளைவிக்கும் கணக்குகள் குறித்து இதுவரை 420 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம்,ஜூலை மாதத்தில், உலகில் தடைசெய்யப்பட்ட அனைத்து கணக்குகளில், 25 சதவிகித கணக்குகள் இந்தியாவில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.மே 15 முதல் ஜூன் 15 வரை 20 லட்சத்து 10 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும்,ஜூன் 15 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை 30 லட்சத்து 27 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவித்த வாட்ஸ்அப் நிறுவனம்,ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 20 லட்சத்து 70 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.உலகளவில் மாதத்திற்கு சுமார் 80 லட்சம் கணக்குகள் தடை செய்யப்படுவதாகவும், அதில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் பதிவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்