பூஸ்டர் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பூஸ்டர் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி
x
உலக முழுவதும் கொரோனா பரவல் இன்னும் ஓயாத நிலையில், சில நாடுகளில் மூன்றாவது அலையும், சில நாடுகளில் 4 வது அலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக அமெரிக்காவாவில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது...

இருப்பினும் வயதானோர் கொரோனாவுக்கு உயிரிழக்க நேரிடுவதை தடுக்கும் விதமாக மூன்றாவது டோஸாக பூஸ்டர் தடுப்பூசி போட பைசர் நிறுவனம் பரிந்துரைத்திருந்தது..

முன்னதாக 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அந்நிறுவனம் அனுமதி கேட்டிருந்த நிலையில், அதனை அமெரிக்க அரசு நிராகரித்திருந்தது.

ஆனால் தற்போது 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும், இதர இணை நோய் பாதிப்புகள் உள்ளவர்களும், எளிதில் கொரோனா நோய் தாக்குதலுக்கு ஆளாக கூடியவர்கள் என்று கண்டறியப்படுபவர்களுக்கு 3வது டோஸ் தடுப்பூசி செலுத்த  அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதே போல், விரைவில் மார்டனா, ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனங்களும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முன்வரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்