நாடாளுமன்ற தேர்தலில் புதின் கட்சி வெற்றி - வெற்றிக் கொண்டாட்டத்தில் மாஸ்கோ மேயர்

ரஷ்யா நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் புதினின் கட்சி, வெற்றிபெற்றதை தொடர்ந்து, கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் புதின் கட்சி வெற்றி - வெற்றிக் கொண்டாட்டத்தில் மாஸ்கோ மேயர்
x
3 நாட்கள் நடந்து முடிந்த தேர்தல், வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், 45 சதவிகித வாக்குகளை பெற்று புதினின் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், மாஸ்கோ மேயர் செர்ஜி சொப்யானின், புதின் பெயரை முழக்கமாக எழுப்பி கொண்டாடினார். அங்கு கூடியிருந்த கட்சியினர், ஆதரவாளர்கள் ஆகியோர் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனிடையே, இது கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட குறைவானது என்றும், கம்யூனிஸ்ட் கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.Next Story

மேலும் செய்திகள்