இளவரசர் பிலிப் உயில் விவகாரம்.. 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்க லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு

இளவரசர் பிலிப் உயில் விவகாரம்.. 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்க லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு
இளவரசர் பிலிப் உயில் விவகாரம்.. 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்க லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு
x
இளவரசர் பிலிப் உயில் விவகாரம்.. 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்க லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு

இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் உயில் 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது சொத்து இந்திய மதிப்பில், 303 கோடியே 78 லட்சத்து 16 ஆயிரத்து 230 ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிலிப் எழுதியுள்ள உயில் தொடர்பாக லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி பிலிப்பின் உயிலில் உள்ள விவரங்களை வெளிப்படுத்தாமல் இருக்க, அதை 90 ஆண்டுகள் சீல் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. மறைந்த இளவரசர் பிலிப், அவரது மனைவி இரண்டாம் எலிசபெத்தின் கவுரவத்திற்காக தன் உயில் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், உயிலின் நகலைப் பதிவுசெய்யவோ, கோர்ட்டில் தாக்கல் செய்யவோ கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்