ஆட்சி பொறுப்பில் இருந்து விலகிய ஏஞ்சலா மெர்க்கல் - உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவர்

ஜெர்மனியில் 16 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்த அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது செயல்பாடுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
ஆட்சி பொறுப்பில் இருந்து விலகிய ஏஞ்சலா மெர்க்கல் - உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவர்
x
ஜெர்மனியின் தலைச்சிறந்த தலைவராகவும், பெண்ணியவாதியாகவும் விளங்கிய ஏஞ்சலா மெர்க்கல் அரசியல் செயல்பாடுகளில் இருந்து விடைபெற்றுள்ளார்.இன்னும் 2 வாரங்களில் ஜெர்மனி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே ஏஞ்சலா மெர்க்கல் பதவி விலகியுள்ளார்.ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக 2005-இல் பொறுப்பேற்ற ஏஞ்சலா மெர்க்கல், 16 ஆண்டுகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டிருக்கிறார்.
நாட்டின் வளர்ச்சியில் மட்டுமின்றி அமைதிக்கான நடவடிக்கைகள், பெண்ணிய செயல்பாடுகள் போன்றவற்றில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அவர், தனிப்பட்ட வாழ்க்கையிலும் எளிமையை கடைபிடித்தார்.அமைதியிழந்த நாடுகளில் இருந்து புகலிடம் தேடி வந்த அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதிலும் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசு முன்னோடியாக விளங்கியது.16 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்தும், தனது செல்வாக்கை சுயவாழ்க்கையில் பயன்படுத்தாமல் எளிமையின் அடையாளமாக திகழ்ந்தார் ஏஞ்சலா மெர்க்கல்.அகதிகளுக்கு புகலிடம் வழங்க உலக நாடுகள் தயக்கம்காட்டிய வேளையில் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், அல்பேனியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஏஞ்சலா மெர்க்கல் ஆதரவு கரம் நீட்டினார்.அகதிகளுக்கான வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து கேள்வி எழுப்பபட்டபோது, "நம்மால் இதை செய்ய முடியும்" எனக்கூறி அதற்கான திட்டங்களை வகுத்ததன் மூலம் அவர் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார்.உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒருவராக கருதப்படும் ஏஞ்சலா மெர்க்கல், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்