பள்ளி குழந்தைகளுக்கு புரோகிராமிங் பயிற்சி- ஆப்ரிக்க பெண்ணின் முயற்சிக்கு வரவேற்பு

ஏழ்மையின் பிடியில் சிக்கியிருக்கும் உகாண்டாவில் பள்ளி குழந்தைகளுக்கு கணினி புரோகிராமிங் கற்பிக்கிறார் ஒரு புதுமை பெண். இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
பள்ளி குழந்தைகளுக்கு புரோகிராமிங் பயிற்சி- ஆப்ரிக்க பெண்ணின் முயற்சிக்கு வரவேற்பு
x
உலகின் ஏழை நாடுகளில் ஒன்றான உகாண்டா, கொரோனா ஊரடங்கால் மோசமான பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. 

பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் நிலையில், இங்கு குழந்தை தொழிலாளர்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், தலைநகர் கம்பாலாவைச் சேர்ந்த வனைஷா என்ற பெண், இதே பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு புரோகிராமிங், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட வகுப்புகளை எடுத்து வருகிறார். 

வாரத்திற்கு மூன்று நாட்கள் நடத்தப்படும் இந்த வகுப்புகளில், 6வயதுக்கு மேற்பட்ட 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

புரோகிராமிங் எனப்படும் மென்பொருள் வடிவமைத்தல், தொழில்நுட்ப யுகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அடுத்த தலைமுறை கோடர்களை உருவாக்குவதே தனது லட்சியம் என வனைஷா குறிப்பிடுகிறார். 

மேலும், தனது நண்பர் முகாபி உதவியுடன், விமானம், விண்வெளி அறிவியல் குறித்த பயிற்சிகளையும் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார். 

நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஆப்ரிக்க கண்டத்தில், வெறும் 16 சதவீதம் பேரே இணையவசதி பயன்படுத்துவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

இதில், மிக சொற்பமான மக்கள்தொகை கொண்ட உகாண்டாவில், அடுத்த தலைமுறை கோடர்களை உருவாக்கும் வனைஷாவின் முயற்சி பாராட்டுக்குரியது.


Next Story

மேலும் செய்திகள்