ஆப்பிரிக்க நாடான கினியாவில் ராணுவ புரட்சி: அதிபர் சிறைப்பிடிப்பு- ஆட்சியை பிடித்த ராணுவம்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் அதிபரை சிறைப்பிடித்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
ஆப்பிரிக்க நாடான கினியாவில் ராணுவ புரட்சி: அதிபர் சிறைப்பிடிப்பு- ஆட்சியை பிடித்த ராணுவம்
x
வறுமை, ராணுவ புரட்சி...

இந்த இரண்டும் ஆப்பிரிக்காவின் பல நாடுகளின் தலையாய பிரச்னைகள்...

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3 நாடுகளில் ராணுவ புரட்சி வெடித்ததே இதற்கு உதாரணம்...

தற்போது ராணுவ ஆட்சிக்கு மாறியுள்ள குட்டி நாடு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா....

ஞாயிற்றுக்கிழமை காலை தலைநகர் கானக்ரியில் உள்ள அதிபர் மாளிகையை நோக்கி படையெடுத்த ராணுவத்தினர், அங்குள்ள படைக்கு எதிராக சண்டையிட்டனர்

நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையின் முடிவில் அதிபர் மாளிகையை கைப்பற்றியது ராணுவம்.. ஜீன்ஸ் பேண்ட்டுடன் சோபாவில் அதிபர் கொண்டேவை அமரவைத்து, தாங்கள் ஆட்சியை கைப்பற்றிவிட்டோம் என வீடியோவை வெளியிட்டு நாட்டு மக்களுக்கு அறிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்