ஆப்கானில் கடும் விலைவாசி உயர்வு - பாக். எல்லையில் காத்திருக்கும் மக்கள்

தலிபான்கள் ஆட்சியின் கீழ் வந்திருக்கும் ஆப்கானிஸ்தானில் விலை வாசி கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், அங்கு மக்கள் எதிர்க்கொள்ளும் சூழல் என்ன என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்.
ஆப்கானில் கடும் விலைவாசி உயர்வு - பாக். எல்லையில் காத்திருக்கும் மக்கள்
x
தலிபான்கள் ஆட்சியின் கீழ் வந்திருக்கும் ஆப்கானிஸ்தானில் விலை வாசி கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், அங்கு மக்கள் எதிர்க்கொள்ளும் சூழல் என்ன என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்.வங்கிகளில் வரிசை, விலைவாசி உயர்வால் வெறிச்சோடிய மார்க்கெட்கள், பசியால் தவிக்கும் லட்சக்கணக்கான மக்கள், பிழைக்க வழிதேடி பாகிஸ்தான் எல்லையில் குவியும் மக்கள் என ஆப்கானிஸ்தான் துயர முகமாகவே காட்சியளிக்கிறது. போதைப்பொருள் ஏற்றுமதி, வெளிநாட்டு உதவியின்றி சொல்வதற்கு பெரியளவில் ஏற்றுமதிக்கு எந்த வழியும் இல்லாத ஆப்கானிஸ்தானின் உணவு தேவை இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. அந்நாட்டின் மொத்த ஜிடிபியில் 40 சதவீதம் வெளிநாட்டு உதவியாகும். இப்போது தலிபான்கள் ஆட்சியில் அது தடைப்பட்டுள்ளதால், மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் பண மதிப்பு சரிந்துவரும் நிலையில் விலை வாசி விண்ணை நோக்கி செல்கிறது. 






Next Story

மேலும் செய்திகள்