ஐடா புயலால் கடும் வெள்ளப்பெருக்கு - விமானப் போக்குவரத்து முற்றிலும் முடக்கம்

ஐடா புயல் ஏற்படுத்திய கனமழையின் காரணமாக நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களில் விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.
ஐடா புயலால் கடும் வெள்ளப்பெருக்கு - விமானப் போக்குவரத்து முற்றிலும் முடக்கம்
x
ஐடா புயல் ஏற்படுத்திய கனமழையின் காரணமாக நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களில் விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.  சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சியும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் உள்ளது. விமான நிலையங்களின் ஓடுபாதைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. பிரிட்ஜ்போர்ட், பென்சில்வேனியா, நியூஜெர்சி போன்ற இடங்களிலும் ஐடா புயலின் கோர தாண்டவத்தை காணமுடிகிறது.  பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ள நிலையில் தனித்தனி தீவுகள் போன்று காட்சியளிக்கும் நகரங்களில் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்