லூசியானாவில் இடா புயல் பாதிப்பு - நிவாரணப் பணிகள் தீவிரம்

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் பகுதி மக்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லூசியானாவில் இடா புயல் பாதிப்பு - நிவாரணப் பணிகள் தீவிரம்
x
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் பகுதி மக்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இடா புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான குடிதண்ணீர், உணவு, மற்றும் செல்போன்களிற்குச் சார்ஜ் ஏற்றுவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் புயலில் இருந்து தப்பிய மக்கள் தற்போது அதீத வெப்பத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து அன்னாபோலிஸில் சூறாவளி காற்று வீசியது. இதை, அன்னாபோலிஸில் வசிப்பவர், சூறாவளியின் விளைவுகளை நேரில் கண்டு, அதன் வீடியோ காட்சிகளை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், அந்த வீடியோ காட்சிகளின் மூலம், மரங்கள் விழுந்து சாலைகள் சேதமடைந்து இருப்பது தெரியவந்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்