தலிபான் அரசியல் பிரிவு தலைவருடன் கத்தாருக்கான இந்திய தூதர் பேச்சு

தலிபன் அரசியல் பிரிவு தலைவரை கத்தாருக்கான இந்திய தூதர் சந்தித்து பேசினார்.
தலிபான் அரசியல் பிரிவு தலைவருடன் கத்தாருக்கான இந்திய தூதர் பேச்சு
x
தலிபன் அரசியல் பிரிவு தலைவரை கத்தாருக்கான இந்திய தூதர் சந்தித்து பேசினார். கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல், தோஹாவில் தலிபான்களின் அரசியல் பிரிவு தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தலிபான் தரப்பின் வேண்டுகோளின் பேரில் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்தது. அப்போது ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 
மேலும் ஆப்கான் நாட்டு மக்கள் குறிப்பாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியா வருகை தரும் விருப்பம் தெரிவித்ததால், அவர்களை திருப்பி அனுப்புவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டை இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு பயங்கரவாத நடவடிக்கைக்கும் பயன்படுத்தக்கூடாது என இந்தியாவுக்கான தூதர் தெரிவித்தார் . இந்த பிரச்சனைகள் சாதகமாக தீர்க்கப்படும் என்று தலிபான் பிரதிநிதி தூதரிடம் உறுதியளித்தார்.



Next Story

மேலும் செய்திகள்