"கொரோனா சி.1.2. - தடுப்பூசிக்கு கட்டுப்படாது" - ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியீடு

புதிய உருமாறிய கொரோனா சி.1.2. வைரஸ், தடுப்பூசிக்கு கட்டுப்படாது என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா சி.1.2. - தடுப்பூசிக்கு கட்டுப்படாது - ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியீடு
x
புதிய உருமாறிய கொரோனா சி.1.2. வைரஸ், தடுப்பூசிக்கு கட்டுப்படாது என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா சி.1.2. வைரஸ் தொடர்பாக  விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 
புதிய உருமாறிய கொரோனா சி.1.2 முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வைரஸ் சீனா, காங்கோ, மொரீஷியஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து, ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.தென் ஆப்பிரிக்காவில் கொரோனா முதல் அலையின் போது, சி.1 உருமாறிய கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடியது. இதனுடன் ஒப்பிடுகையில், சி.1.2. கொரோனா அதிகமாக உருமாற கூடியது என தெரியவந்துள்ளது. இதோடு, இதுவரை உலகம் முழுவதும் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ரகங்களை விட அதிகமாக உருமாறக்கூடியதும், இந்த சி.1.2 கொரோனா வரைஸ் தான்  என்றும்.ஆண்டுக்கு இந்த வைரஸ் 42 தடவை உருமாறும் என்றும் தெரியவந்துள்ளது. இது மற்ற வைரஸ் ரகங்களின் உருமாற்றத்தை விட இரண்டு மடங்கு அதிகம். மேலும், ஆல்பா, பீட்டா போன்ற உருமாறிய கொரோனா வைரஸ்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியும் சி.1.2 வைரசை முறியடிக்க முடியாது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 






Next Story

மேலும் செய்திகள்