கட்டாய கொரோனா தடுப்பூசி - போராட்டத்தில் இறங்கிய மக்கள்

கிரீஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு போலீசாருக்கும் இடையே கலவரம் வெடித்தது.
கட்டாய கொரோனா தடுப்பூசி - போராட்டத்தில் இறங்கிய மக்கள்
x
கிரீஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு போலீசாருக்கும் இடையே கலவரம் வெடித்தது. ஏதென்ஸ் நகரில் முன்களப் பணியாளர்கள் கட்டாய கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் கிரீஸ் பாராளுமன்றத்திற்கு வெளியே கொரோனா தடுப்பூசிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி போராடி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக் காரர்கள் பொருட்கள் உள்ளிடவற்றை வீசியதாகக் கூறி, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.  கடந்த மாதமும் இதே காரணத்திற்காக மக்கள் போராடியபோதும் கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்