ஜம்மு காஷ்மீரை மீட்க தலிபான்களுக்கு அழைப்பு? - தலிபான்களை அழைக்கும் ஜெய்ஷ்-இ-முகமது

காஷ்மீரை கைப்பற்ற உதவுமாறு தலிபான் தலைமையிடம், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரை மீட்க தலிபான்களுக்கு அழைப்பு? - தலிபான்களை அழைக்கும் ஜெய்ஷ்-இ-முகமது
x
காஷ்மீரை கைப்பற்ற உதவுமாறு தலிபான் தலைமையிடம், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானை, தலிபான் அமைப்பினர் 20 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றினர். வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச் சூடு, சிறைபிடிப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகளை நடத்திய தலிபான் அமைப்பு, காபூல் நகரை கைப்பற்றிய போது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஷார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது, தலிபான் அமைப்பின் தலைவர், முல்லா அப்துல் கானியிடம், ஜம்மு காஷ்மீரை கைப்பற்ற உதவுமாறு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள், எந்த நாட்டுடனும், தீவிரவாத செயலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார். ஆனால், நீண்ட நாட்களாக நட்பு பாராட்டும் ஜெய்ஷ்-இ-முகமது அ​மைப்புக்கு உதவுவார்களா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தலிபான்கள் உதவியுடன் கடத்தியதன் மூலம், பயணிகளை காப்பாற்றும் விதமாக இந்திய சிறையில் இருந்து மசூத் அசார் விடுவிக்கப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்