படகு பேருந்து; பரவச பயணம் - சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பேருந்து

பிரான்ஸ் நாட்டில் தரையிலும், தண்ணீரிலும் செல்லும் புதிய ரக பேருந்து, சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
படகு பேருந்து; பரவச பயணம் - சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பேருந்து
x
பிரான்ஸ் நாட்டில் தரையிலும், தண்ணீரிலும் செல்லும் புதிய ரக பேருந்து, சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், இதைப் போன்ற, தரையிலும், தண்ணீரிலும் செல்லும் நவீன பேருந்து ஒன்று அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.பாரிஸ் நகரை முழுமையாக சுற்றி பார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகள் இதில் ஆர்வத்துடன் பயணம் செய்கின்றனர்.பாரிஸ் நகரின் சாலைகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் இந்த பேருந்து, நகரின் நடுவில் பாய்ந்தோடும் ஸீன் நதியின் மெதுவாக இறங்கி, பின்னர் ஒரு மிதக்கும் படகாக உருவெடுக்கிறது.
பேருந்தின் எஞ்சின் தொடர்ந்து இயக்கப்பட்டு, நதிப் படகு போல
செல்கிறது. டயர்களின் இயக்கம் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக 
பேருந்தின் பின் பக்கத்தில் உள்ள ப்ரெப்பெல்லார் (propeller) 
இயங்கத் தொடங்குகிறது.பேருந்தில் உள்ள சுற்றுலா பயணிகள், ஸீன் நதியின்
இரு கரைகளிலும் அமைந்துள்ள முக்கிய கட்டிடங்கள், 
அரண்மனைகள், சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்கின்றனர்.பாரிஸின் வாத்துகள் என்ற நிறுவனம் இந்த நவீனப் பேருந்தை இயக்கி வருகிறது.
ஏராளமான உள்ளூர்வாசிகளும் தம் குடும்பங்களுடன் இந்த பேருந்தில் நதிப் பயணம் மேற்கொள்கின்றனர். 

 



Next Story

மேலும் செய்திகள்