ஆப்கானில் இருந்து மக்களை மீட்கும் பணி : "அனைவரையும் மீட்க முடியாது" - அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து மக்களையும் வெளியேற்றுவது என்பது இயலாத காரியம் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கானில் இருந்து மக்களை மீட்கும் பணி : அனைவரையும் மீட்க முடியாது - அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்
x
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்க படைகள் காபூலில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக, அந்நாட்டில் இருந்து வெளியேற விரும்பும் அனைத்து ஆப்கான் மக்களையும் மீட்டுக் கொண்டு வர முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், காபூலில் நடந்த தாக்குதல் மிகவும் மோசமானது எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் தலிபான்கள் தங்களுக்கு நண்பர்கள் அல்ல என்றும், ஆனால் அவர்களுடன் இணக்கமாக சென்றதால்தான், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரை மீட்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்