பேஸ்புக் கொண்டு வரும் புதிய வசதி: இனி ஆடியோ, வீடியோ கால் செய்யலாம்

பேஸ்புக் செயலி மூலம், ஆடியோ, வீடியோ கால்களை மேற்கொள்ளும் வசதியை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பேஸ்புக் கொண்டு வரும் புதிய வசதி: இனி ஆடியோ, வீடியோ கால் செய்யலாம்
x
பேஸ்புக் பயனாளிகள் மெஸ்செஞ்சர் என்ற தனி செயலி மூலம் தற்போது ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.  

இனி பேஸ்புக் செயலி மூலம், நேரடியாக ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளும் வசதியை செய்ய உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

2014 வரையில் பேஸ்புக் செயலி மூலம் இத்தகைய அழைப்புகளை மேற்கொள்ள
வசதிகள் இருந்தது. அதன் பின்னர் இந்த சேவைகள் மெஸ்செஞ்சர் செயலி மூலம் அளிக்கப்பட்டது.

பயனாளிகளுக்கான சேவைகளை அதிகரிக்க செய்வதன் மூலம் கடுமையான
சந்தைப் போட்டிகளை சமாளிக்கவும், பயனாளிகளின் எண்ணிக்கையை
தக்க வைத்துக் கொள்ளவும் பேஸ்புக் இத்தகைய முயற்சிகளை எடுப்பதாக
சமூக ஊடகத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், இன்ஸ்டாகிராம் பயனாளிகளுடன், மெஸ்செஞ்சர்
பயனாளிகள் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியை பேஸ்புக் நிறுவனம்
அறிமுகப்படுத்தியது. எதிர்காலத்தில் வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து
செயலிகளும் இவ்விதம் ஒருங்கிணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்