காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் : ஹமாஸ் ஆயுதத் தளங்கள் மீது தாக்குதல்
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனிய போராட்டக் காரர்களுக்கு இடையே நேற்று மோதல் முற்றிய நிலையில், காசாவில் உள்ள ஹமாஸ் தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 1 இஸ்ரேல் வீரரும், 41 பாலஸ்தீனியர்களும் படுகாயமடைந்தனர். அவர்களில் 13 வயது சிறுவன் தலையில் சுடப்பட்டதால் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக காசா அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் ஒரு இஸ்ரேல் இராணுவ வீரர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக காசாவில் உள்ள ஹமாஸ் குழுவின் ஆயுதத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
Next Story

