"ஆப்கான் மக்களை எங்களால் கைவிட முடியாது" - ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

"ஆப்கான் மக்களை எங்களால் கைவிட முடியாது" - ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
ஆப்கான் மக்களை எங்களால் கைவிட முடியாது - ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
x
"ஆப்கான் மக்களை எங்களால் கைவிட முடியாது" - ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தான் மக்களை எங்களால் கைவிட முடியாது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா குட்ரெஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் விவகாரம்  தொடர்பாக நடைபெற்ற அவசர கூட்டத்தில் பேசிய அவர், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக ஆப்கான் மாறாமல் இருக்க சர்வதேச சமூகத்தின் நடவடிக்கை தேவை என்றும் அங்கு தலிபான்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும்  அண்டோனியா குட்ரெஸ்  கூறினார். ஆப்கானில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிக்கிறது என்றும் உயிர்களை பாதுகாப்பதற்கும் மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் தாலிபான்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நிதானமாக நடந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பெருமைக்குறிய ஆப்கான் மக்களுக்கு எங்களின் முழு ஆதரவு உண்டு என்றும் அனைத்தையும் உலகம் பார்த்து கொண்டிருக்கும் சூழலில் அவர்களை கைவிட முடியாது என்றும் அண்டோனியா குட்ரெஸ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்