"ஆப்கான் விவகாரம்-உன்னிப்பாக கண்காணிப்பு" - இந்திய வெளியுறவுத்துறை தகவல்

"ஆப்கான் விவகாரம்-உன்னிப்பாக கண்காணிப்பு" - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
ஆப்கான் விவகாரம்-உன்னிப்பாக கண்காணிப்பு - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
x
"ஆப்கான் விவகாரம்-உன்னிப்பாக கண்காணிப்பு" - இந்திய வெளியுறவுத்துறை தகவல்

ஆப்கான் விவகாரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகிறவர்களை இந்தியாவுக்கு வரவழைக்கும் நடைமுறை எளிதாக்கப்படும் என்றும் பரஸ்பர வளர்ச்சி, கல்வி மேம்படு உள்ளிட்டவற்றில் ஆப்கானை சேர்ந்தவர்கள் நமக்கு கைகொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆப்கானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அங்கு நிலவும் தற்போதைய சூழலை உன்னிப்பாக காண்காணித்து வருவதாகவும் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்