அமெரிக்காவில் சூறாவளி எச்சரிக்கை - விரைந்து தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

அமெரிக்காவில் சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாநிலங்களில் மக்களை விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சூறாவளி எச்சரிக்கை - விரைந்து தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்
x
அமெரிக்காவில் சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாநிலங்களில் மக்களை விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஃப்ளோரிடா உள்ளிட்ட தென் கிழக்கு பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல பகுதிகளில் இம்மாதத்தில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இயற்கை பேரழிவைத் தடுக்க முடியாவிட்டாலும், பெருந் தொற்றைத் தடுக்க முடியும் என்று அவர் கூறினார். சூறாவளி பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற வேண்டி இருக்கும் என்பதால், அப்பகுதி மக்கள் விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்