டோக்கியோ ஒலிம்பிக் கோலாகலமாக நிறைவு - கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா

டோக்கியோ ஒலிம்பிக் கோலாகலமாக நிறைவு - கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா
டோக்கியோ ஒலிம்பிக் கோலாகலமாக நிறைவு - கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா
x
டோக்கியோ ஒலிம்பிக் கோலாகலமாக நிறைவு - கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா

17 நாட்கள் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவடைந்தது.32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. 17 நாட்கள் நடந்த பல்வேறு விளையாட்டுகளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று குவித்தனர். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா, டோக்கியோ நகரில் இன்று நடைபெற்றது. தொடக்க விழாவைப் போல், நிறைவு விழாவிலும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக்கில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் அணிவகுப்பு நடந்தது. இதில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடியை சுமந்து இந்திய அணியின், அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார். அடுத்த ஒலிம்பிக் போட்டிகள், 2024-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற உள்ள நிலையில், பாரிஸ் மேயரிடம் ஒலிம்பிக் கொடி அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்