தலை விரித்தாடும் வறுமை,வேலை வாய்ப்பின்மை - தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டம்

அர்ஜென்டினாவில் வறுமை மற்றும் வேலை வாய்ப்பின்மையை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடினர்.
தலை விரித்தாடும் வறுமை,வேலை வாய்ப்பின்மை - தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டம்
x
அர்ஜென்டினாவில் வறுமை மற்றும் வேலை வாய்ப்பின்மையை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில்  இறங்கி போராடினர். கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இடது சாரிகள் மற்றும் பல அமைப்புகள் இணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போதிய வருமானம் இல்லாததால் உணவுப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் ஏராளமான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக போராட்ட அமைப்புகள் குற்றம் சாட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்