எல்லைக்கு செல்லும் நாடாளுமன்ற நிலைக்குழு - பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசனை

இந்திய எல்லையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வரும் 16ம் தேதி உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு லடாக்கிற்கு செல்கிறது.
எல்லைக்கு செல்லும் நாடாளுமன்ற நிலைக்குழு - பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசனை
x
இந்திய எல்லையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வரும் 16ம் தேதி உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு லடாக்கிற்கு செல்கிறது. எல்லையில் மோதலில் ஈடுபட்டு வரும் சீனாவின் நிலைபாடு, லடாக்கில் செயல்படுத்தப்படும் நிர்வாக நடவடிக்கைகள், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு வரும் 16ம் தேதி இந்திய எல்லைக்கு செல்கிறது.  இதற்கு காங்கிரசின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தலைமை தாங்குகிறார். ஒரு வாரம் நடைபெறும் இந்த ஆய்வில் எல்லை தொடர்பான பிரச்சனைகளை இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. 16ம் தேதி இந்தோ- திபெத்திய எல்லைப்பகுதியின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அதன்பின் 18ம் தேதி ஸ்ரீநகரில் நிர்வாகம், வளர்ச்சி மற்றும் மக்களின் நலன் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து உள்துறை அமைச்சகம், மத்திய ரிசர்வ் படை என ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த குழு, 22ம் தேதி மீண்டும் டெல்லி திரும்புகிறது. 


Next Story

மேலும் செய்திகள்