ஹாங்காங் சுதந்திரத்திற்கு போராடிய இளைஞர் - இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதல் முறையாக இளைஞர் ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன...
ஹாங்காங் சுதந்திரத்திற்கு போராடிய இளைஞர் - இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை
x
சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றது, ஹாங்காங்... ஆனால் அதனை முழுவதுமாக தட்டிப்பறிக்கும் வகையில் புது புது சட்டங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது, சீன அரசு.

கடந்த 2019 ஆம் ஆண்டு  ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க, கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்த கொண்டு வர சீனா முயற்சிக்க, இதனை எதிர்த்து பல மாதங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், ஹாங்காங் வாசிகள். இதனை தடுத்து, ஒட்டுமொத்த ஹாங்காங் மக்களை ஒடுக்க  அடுத்து சீன தனது கையில் எடுத்த ஆயுதம் தான், தேசிய பாதுகாப்பு சட்டம். கடந்த ஆண்டு முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் இதுவரை 130க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டனர். அப்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டவர் தான், டோங் யிங்-கிட் என்ற 24 வயதான இளைஞர்... 

ஹாங்காங்கை விடுவிக்கவும் என்ற முழக்கம் எழுத்தப்பட்டிருந்த கொடியுடன், இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி நின்று கொண்டிருந்த மூன்று போலீஸ்காரர்களை காயப்படுத்திய காரணத்திற்காக கைது செய்யப்பட்டிருந்தார், டோங் யிங்-கிட். ஏற்கனவே ஓராண்டாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அவருக்கு தற்போது தீவிரவாத செயலில் ஈடுபட்டதாகவும், பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்த காரணத்தினாலும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவருக்கு முதல் முறையாக கடும் தண்டனையாக 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, சீனாவிற்கு எதிராக ஹாங்காங்கில் போராடுபவர்களை முடக்க நினைக்கும் செயல் என பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த தண்டனை ஹாங்காங் மக்களின் எதிர்காலத்தை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்