அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவு

அமெரிக்காவின் அலாஸ்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவு
x
அமெரிக்காவின் அலாஸ்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 8 புள்ளி 2 ஆக பதிவான நிலநடுக்கம்,
அலாஸ்காவின் பல பகுதிகளில் உணரப்பட்டது.

இதேபோல, அடுத்த ஒன்றரை மணி நேரத்திற்குள்ளாக 5 முறை
நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெர்ரிவில் நகரத்திற்கு தென்கிழக்கே 91 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் அலாஸ்காவின் தென் பகுதிகள், ஹவாய், பெனின்சுலா மற்றும் பசுபிக் கடற்கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சைரன் வாகனங்கள் மூலம் சுனாமி எச்சரிக்கை பற்றிய அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டதால், கடற்கரையோர பகுதிகளில்
இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.

Next Story

மேலும் செய்திகள்