18 முதல் 49 வயதிற்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி விரிவாக்கம் - தென் கொரிய அரசு முடிவு

தென் கொரியாவில் 18 முதல் 49 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை விரிவுபடுத்த் அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.
18 முதல் 49 வயதிற்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி விரிவாக்கம் - தென் கொரிய அரசு முடிவு
x
தென் கொரியாவில் 18 முதல் 49 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை விரிவுபடுத்த் அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது. அந்நாட்டில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களால் அதிகம் தொற்று பரவுவதாகக் கருதப்படுகிறது. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 36.5 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், 2 தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் வெறும் 14 சதவீதம் பேர் மட்டுமே என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 18 முதல் 49 வயதிற்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணீயை விரிவு படுத்துவதன் மூலமாக செப்டம்பருக்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்