பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் அடித்துக் கொலை..? - போர் நெறிமுறைகளை தாலிபன் மீறியதா..?

இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் தாலிபன் தீவிரவாதிகளால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டதாக அமெரிக்காவில் செய்தி வெளியாகியுள்ளது.
பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் அடித்துக் கொலை..? - போர் நெறிமுறைகளை தாலிபன் மீறியதா..?
x
ஆப்கானிஸ்தானின் கந்தகஹர் பகுதியில் தாலிபன் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் நடந்த மோதலில் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். தாக்குதலின் போது பத்திரிகையாளர் இருந்தது தங்களுக்கு தெரியாது என்றும், அவரின் மரணத்திற்கு வருத்தத்தையும் தாலிபன் தெரிவித்துக் கொண்டது. இந்த நிலையில் டேனிஷ் சித்திக் பத்திரிகையாளர் என தெரிந்தே அவரை தலையில் அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமாக கொலை செய்துள்ளதாக அமெரிக்காவில் செய்தி வெளியாகியுள்ளது. தாக்குதலின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரோடு இருந்த டேனிஷை உள்ளூர் பள்ளிவாசலுக்கு ஆப்கான் வீரர்கள் அழைத்து சென்றதாகவும், அப்பொழுது பள்ளிவாசலினுள் புகுந்த தாலிபன் தீவிரவாதிகள் டேனிஷை அழைத்து சென்று தாக்கியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாலிபன் தீவிரவாதிகள் போர் நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்