பெருவின் புதிய அதிபர் பெட்ரோ கேஸ்டில்லோ - வாழ்த்து தெரிவித்த சிலி அதிபர் பினெரா

பெருவின் புதிய அதிபர் பெட்ரோ கேஸ்டில்லோவிற்கு, சிலி அதிபர் பினெரா வாழ்த்து தெரிவித்தார்.
பெருவின் புதிய அதிபர் பெட்ரோ கேஸ்டில்லோ - வாழ்த்து தெரிவித்த சிலி அதிபர் பினெரா
x
பெருவின் புதிய அதிபர் பெட்ரோ கேஸ்டில்லோவிற்கு, சிலி அதிபர் பினெரா வாழ்த்து தெரிவித்தார். பெரு நாட்டின் 63வது அதிபராக பெட்ரோ கேஸ்டில்லோ பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழாவில், வெளிநாட்டு விருந்தினர்களாக சிலி அதிபர் செபாஸ்டியன் பினெராவும், கொலம்பிய அதிபர் இவான் டியூக்கும் பங்கேற்றனர். அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட கேஸ்டில்லோ பெரு நாட்டின் பொருளாதார நிலை சமன்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த சிலி அதிபர் பினெரா, கேஸ்டில்லோ சிறப்பாக செயல்பட்டால் பெரு முன்னேறும் என்றும், அந்நாடு முன்னேறினால் தங்கள் அனைவருக்குமே நன்மை என்றும் நம்பிக்கை பொழிந்தார். பதவியேற்பு விழாவை பெட்ரோவின் ஆதரவாளர்கள் கோலாகலமாகக் கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்