பருவநிலை மாற்றம் - வெப்பம் அதிகரிப்பு; தோல் உரிந்து வேதனையில் தவிக்கும் மீன்கள்

அமெரிக்காவில் ஆற்றுநீர் வெப்பமாகி மீன்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தின் மோசமான முகத்தை காட்டியிருக்கும் ஒரு நிகழ்வை தற்போது பார்க்கலாம்.
பருவநிலை மாற்றம் - வெப்பம் அதிகரிப்பு; தோல் உரிந்து வேதனையில் தவிக்கும் மீன்கள்
x
அமெரிக்காவில் ஆற்றுநீர் வெப்பமாகி மீன்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தின் மோசமான முகத்தை காட்டியிருக்கும் ஒரு நிகழ்வை தற்போது பார்க்கலாம்.உடலில் காயம் மற்றும் வேதனையை சுமந்து செல்லும் மீன்களை காட்சிப்படுத்தியிருக்கும் இந்த வீடியோ அமெரிக்காவின் கொலம்பியா ஆற்றில் நீருக்கு அடியில் எடுக்கப்பட்டதாகும். உடலில் தோல் உரிந்து, மரணத்தை நோக்கி பயணிக்கும் இந்த மீன்களின் பரிதாப நிலைக்கு, ஆற்றுநீர் வெப்பமாதல்தான் காரணம் என்றால் நம்புவதற்கு வியப்பாகதான் இருக்கும்.ஆனால், அதுதான் உண்மையென கூறுகிறது இந்த வீடியோவை வெளியிட்டிருக்கும் கொலம்பியா ஆற்று பாதுகாப்பு அமைப்பு.வட அமெரிக்காவில் 70 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவான பின்னர், கடந்த 16 ஆம் தேதி வீடியோவை எடுத்ததாக தெரிவித்திருக்கிறது.அமெரிக்கா, கனடாவில் சமீபத்தில் வீசிய வெப்பக்காற்றுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பெரும் வனப்பரப்புக்கள் தீக்கிரையாகியிருக்கிறது. இந்த கொடூர வெப்பம் நீரிலிருக்கும் மீன்களையும் விட்டுவைக்கவில்லை என கவலை தெரிவிக்கிறார்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.வழக்கமாக இனப்பெருக்கத்திற்காக கடலில் இருக்கும் சாலமன் மீன்கள் ஆற்றுபடுகைக்கு வரும் எனக் கூறும் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த வாண்டன் கேவெல், இப்போது  அவைகளுக்கு வேறுவழியில்லை... ஒன்று இனப்பெருக்கம் செய்ய வேண்டும் அல்லது மடிய வேண்டும் என்கிறார். எவ்வளவு மீன்கள் இறந்துள்ளன என்பது தெரியவில்லை எனக் கூறும் அவர், இப்போதே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதுபோன்ற சோகம் தொடரும் என எச்சரிக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்