துருக்கி : கிடங்கில் ஏற்பட்ட தீயால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

துருக்கியின் காசியான்டெப் பகுதியில் இருக்கும் கிடங்கில் திடீரென பெரிய அளவில் தீப்பற்றி எரிந்தது.
துருக்கி : கிடங்கில் ஏற்பட்ட தீயால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
x
துருக்கியின் காசியான்டெப் பகுதியில் இருக்கும் கிடங்கில் திடீரென பெரிய அளவில் தீப்பற்றி எரிந்தது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்த போராடினர். இந்நிலையில், கோரமாக தீ பரவியதால், அங்கு தீப்பற்றி சில பொருட்கள் வெடித்தன. மேலும் வெடிப்புகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அதிகாரிகள் அருகிலுள்ள வீடுகளில் இருக்கும் மக்களை வெளியேற்றினர். இந்த சம்பவம் நடக்கும் பொழுது கிடங்கில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் எதுவும் நேரவில்லை.

Next Story

மேலும் செய்திகள்