சீனாவை பதம் பார்த்த பேரிடர்கள் - பல இடங்களில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

கொரோனா வைரஸ் உருவான சீனாவை இயற்கை பேரிடர்கள் பதம் பார்த்து வருகின்றன.
சீனாவை பதம் பார்த்த பேரிடர்கள் - பல இடங்களில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
x
கொரோனா வைரஸ் உருவான சீனாவை இயற்கை பேரிடர்கள் பதம் பார்த்து வருகின்றன. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்... சீனாவில் பெருக்கெடுத்துச் செல்லும் வெள்ளம்... மீட்பு பணிகள், புயல் - மழை கடல் கொந்தளிப்பு; புழுதி புயல்.. செத்து மிதக்கும் விலங்குகள்...பெரும் நகரத்தை மூழ்கடிக்கும் வகையில் எழுந்துவரும் இந்த புழுதி புயல் ஏதோ ஆங்கில திரைப்படத்தில் வரும் காட்சியல்ல... சீனாவின் டுன் ஹூவாங் பகுதியை தாக்கியிருக்கும் புயலாகும்...  கோபி பாலைவனத்தில் 300 அடி உயரத்தில் எழுந்த இந்த புயலால் அந்நகரமே நகரமே மூழ்கியது. 20 அடி தூரத்தில் உள்ள பொருட்கள் காண முடியாத சூழல் ஏற்பட்டதால்  போக்குவரத்து முடங்கியது.   மறுபுறம் சீனாவின் கிழக்கு கடற்கரை மாகாணங்களான செஜியாங், சியாங்சு மாகாணங்களை இன்-பா சூறாவளி புயல் புரட்டிப்போட்டுள்ளது. அங்கு ஆக்ரோஷமாக காணப்பட்ட கடல், தடுப்பை தாண்டி பொங்கி எழுந்தது.


Next Story

மேலும் செய்திகள்