50 டிகிரியை தாண்டிய வெப்பநிலை -செயற்கை மழையை உருவாக்கி துபாய் சாதனை

கோடை கால வெப்பத்தை தணிக்க செயற்கை மழை பொழிவை உருவாக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது துபாய்.
50 டிகிரியை தாண்டிய வெப்பநிலை -செயற்கை மழையை உருவாக்கி துபாய் சாதனை
x
கோடை கால வெப்பத்தை தணிக்க செயற்கை மழை பொழிவை உருவாக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது துபாய்.

கோடை காலத்தை எதிர்கொண்டிருக்கும் துபாய், 50 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தால் தகித்துக்கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்ததால் அதனை தணிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது அந்நாடு. பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் துபாய், எந்த விலை கொடுத்தும் தமது தேவையை அடைந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், இயற்கையின் விதியையே மாற்றி செயற்கையாக மழை பொழிய வைத்துவிட முடியுமா என்ன? ஆம். அத்தகைய வல்லமையும் தன்னிடம் இருக்கிறது என அந்நாடு நிரூபித்திருக்கிறது. வெப்பத்தை தணிக்க கிளவுட் சீடிங் மூலம் செயற்கையாக மழையை உருவாக்கி, அந்நாட்டு வானியல் விஞ்ஞானிகள் அசத்தியிருக்கிறார்கள்.

மின்சக்தியால் மேகங்கள் செயற்கையாக தூண்டப்பட்டு, அதன் மூலம் மழை பொழிவை அளிப்பது தான் கிளவுட் சீடிங் முறை. 2 விதமான வழிமுறைகள் இதற்கு மேற்கொள்ளப்படுகின்றன. ட்ரோன் மூலம் சில்வர் அயோடைட் என்ற வேதிபொருளை மேகங்களுக்கு இடையே செலுத்துதல் மற்றும் ட்ரோன் மூலம் மேகத்திற்கு மின்சக்தியை பாய்ச்சுதல் ஆகியவை மூலம் மழை பொழிவை உருவாக்குகிறார்கள்.

விஞ்ஞானத்தில் இதற்கான சாத்தியங்கள் கண்டறியப்பட்டாலும், ஐக்கிய அரபு அமீரகம் தற்போது அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது எனலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை பொழிவை அதிகரிக்க கடந்த 2017-ஆம் ஆண்டு ஒன்றரை கோடி டாலர் மதிப்பீட்டில் மாற்று மழைப்பொழிவு திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதில் ஒன்றான இந்த கிளவுட் சீடிங், நவீன விஞ்ஞானத்தின் மற்றொரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்