மாணவர்களுக்கு வில்லனா செல்போன்? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

நாட்டில் கற்றலைவிட நண்பர்களுடன் உரையாடுவதற்கே மாணவர்கள் அதிகம் செல்போனை பயன்படுத்துவதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாணவர்களுக்கு வில்லனா செல்போன்? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
x
நாட்டில் கற்றலைவிட நண்பர்களுடன் உரையாடுவதற்கே மாணவர்கள் அதிகம் செல்போனை பயன்படுத்துவதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆன்லைன் கல்வி மற்றும் மாணவர்களின் செல்போன் பயன்பாடு குறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஆய்வு நடத்தியது. 6 மாநிலங்களில் 60 பள்ளிகளை தேர்ந்தெடுத்து 3,491 மாணவர்கள், 1,534 பெற்றோர்கள், 786 ஆசிரியர்கள் என மொத்தம் 5,811 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.இதில் அதிர்ச்சி தரும் விஷயமாக, 10 புள்ளி1 சதவிகித மாணவர்கள் மட்டுமே கற்றலுக்காக செல்போன் பயன்படுத்துவதும், 52 புள்ளி 9 சதவிகிதம் பேர் நண்பர்களுடன் சேட்டிங் செய்ய செல்போனை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.10 வயது குழந்தைகளில் 37 புள்ளி 8 சதவிகிதம் பேர் பேஸ்புக் பயன்படுத்துவதும், 24 புள்ளி 3 சதவிகிதம் பேர் இண்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.8முதல் 18 வயதுடைய மாணவர்களில் 30 சதவிகிதம் பேர் சொந்தமாக செல்போன் வைத்துள்ளதும், அதேபோல தினசரி செல்போன் பயன்பாடு மாணவர்கள் மத்தியில்  அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்