கியூபாவிற்கு உதவும் மெக்சிகோ : உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைப்பு
மெக்சிகோ சார்பாக கியூபாவிற்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் அனுப்பும் பணிகள் துவங்கின.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் விதித்த பொருளாதாரத் தடை காரணமாக கியூபாவில் அமைதியின்மை சூழல் நிலவுவதாக கியூப அதிபர் ஆன்ட்ரெஸ் மானுவெல் லோபஸ் ஆப்ரேடர் குற்றம் சாட்டினார். மெக்சிகோவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக அங்குள்ள கியூப ஆதரவாளர்கள் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையை நீக்கக் கோரி போராடினர். கியூபாவில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கும் அமெரிக்கா தான் காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த சூழலில், கியூபாவில் அரசுக்கெதிரான போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் அந்நாட்டு அதிபரைப் பதவி விலகக் கோரியும் வலியுறுத்தினர். இந்நிலையில், கியூப மக்களுக்கு உதவும் பொருட்டு மெக்சிகோ சார்பாக 2 கடற்படை கப்பல்களில் உணவு, மற்றும் மருத்துவ உபகரணங்கள் அந்நாட்டிற்கு அனுpபி வைக்கப்படவுள்ளன.
Next Story