சுற்றுலாத் தளத்தில் குவியும் மக்கள்; காற்றில் பறக்கும் கொரோனா விதிகள் - தீவிரமாகக் கண்காணித்து வரும் போலீசார்

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகாரஷ்டிர மாநிலத்தின் புனேவில் உள்ள லொனாவ்லா பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலாத் தளத்தில் குவியும் மக்கள்; காற்றில் பறக்கும் கொரோனா விதிகள் - தீவிரமாகக் கண்காணித்து வரும் போலீசார்
x
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகாரஷ்டிர மாநிலத்தின் புனேவில் உள்ள லொனாவ்லா பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா 3வது அலை அச்சுறுத்தத் துவங்கியுள்ள நிலையில், மக்கள் அதைப் பற்றிய கவலை இல்லாமல், புனேவிலுள்ள லொனவ்லா சுற்றுலாத் தளத்தில் கொரோனா விதிகளைப் பின்பற்றாமல் கூட்டமாகக் குவியத் துவங்கியுள்ளனர். இதனால் தொற்றுப் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என்பதால், போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, கொரோனா விதிகளைப் பின்பற்ற மக்களை அறிவுறுத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்