20 ஆண்டுகளாக தொடரும் உள் நாட்டு போர் - படைகளை வாபஸ் பெறும் ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர், ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடையும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
20 ஆண்டுகளாக தொடரும் உள் நாட்டு போர் - படைகளை வாபஸ் பெறும் ஜோ பைடன்
x
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர், ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடையும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 2001 செப்டம்பர் 11இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரங்களை, ஆப்கானிஸ்தானை சேர்ந்த அல் கொய்தா பயங்கரவாதிகள் தகர்த்தனர். இதில் 2977 பேர் பலியாகினர்.இதைத் தொடர்ந்து, பின் லேடன் தலைமையிலான அல் கொய்தா பயங்கரவாதிகளை அழிக்க, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா 2001 அக்டோபரில் படை எடுத்து, அங்கு அல் கொய்தாவிற்கு ஆதரவு அளித்து வந்த தாலிபான்கள் ஆட்சியை அகற்றியது. 
20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தை வரும் ஆகஸ்ட் 31க்குள் முழுமையாக திரும்பப் பெற உள்ளதாக அமெரிகக் அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். தாலிபான்களுடன் உள்நாட்டுப் போர் அங்கு தொடர்ந்து நடை பெறும் நிலையில், இந்த பிரச்சனைக்கு ராணுவ ரீதியான தீர்வு சாத்தியமில்லை என்றும், இதற்காக அமெரிக்க ராணுவ வீரர்களை தொடர்ந்து பலி கொடுக்க முடியாது என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய தேசத்தை உருவாக்கவதற்காக அமெரிக்க படைகள் அங்கு அனுப்படவில்லை என்றும், ஆப்கானிஸ்தான் தலைவர்கள் ஒருங்கிணைந்து தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்று ஜோ பைடன் கூறினார். தாலிபான்களை தான் நம்பவில்லை என்றும், ஆனால் ஆப்கன் ராணுவம், தாலிபான்களின் தாக்குதல்களை முறியடிக்கும் என்று நம்புவதாக ஜோ பைடன் தெரிவித்தார்.ஆனால் அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், ஆபாகானிஸ்தானின் பல மாவட்டங்களை தாலிபான் படையினர் படிப்படியாக ஆக்கிரமித்து வருகின்றனர். 
 


Next Story

மேலும் செய்திகள்