செல்ல பிராணியாக சிங்கம்... வீட்டில் வளர்க்கும் தொழிலதிபர் - உரிமையாளரிடம் திருப்பி அளித்த பிரதமர்

கம்போடிய அரசு அதிகாரிகளினால் கைபற்றப்பட்ட சிங்கம் ஒன்றை அதன் உரிமையாளரிடம் திருப்பி அளிக்க, அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
செல்ல பிராணியாக சிங்கம்... வீட்டில் வளர்க்கும் தொழிலதிபர் - உரிமையாளரிடம் திருப்பி அளித்த பிரதமர்
x
கம்போடிய அரசு அதிகாரிகளினால் கைபற்றப்பட்ட சிங்கம் ஒன்றை அதன் உரிமையாளரிடம் திருப்பி அளிக்க, அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஒரு பாச போராட்டத்தின் கதையை விவரிக்கிறது, இந்த தொகுப்பு..கம்போடியாவில் குவோ என்ற தொழிலதிபர்,  70 கிலோ எடை கொண்ட சிங்கம் ஒன்றை தன் வீட்டில் சட்ட விரோதமாக வளர்த்து வந்தார்.
மனிதர்களுக்கும், இதர விலங்குகளுக்கும் இந்த சிங்கத்தினால் ஆபத்து ஏற்படுவதை தடுக்க இதன் கோரைப் பல் மற்றும் நகங்கள் நீக்கப்பட்டுள்ளன. கைபற்றப்பட்ட சிங்கம், உரிமையாளர் வீட்டிற்கு அனுப்பட்ட சிங்கம், உரிமையாளர் குவோ டிக்டாக்கில் இதைப் பற்றிய வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து கம்போடிய வனத் துறையினர் இந்த சிங்கத்தை கைபற்றி, ஒரு வனவிலங்கு காப்பகத்திற்கு எடுத்துச் சென்றனர்.இதனால் பெரும் சோகத்தில் ஆழ்ந்த சிங்கத்தின் உரிமையாளர், இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட, அது தீயாக பரவியது. இந்த செய்தியை கேள்விப்பட்ட கம்போடிய பிரதமர் ஹன் சென், இந்த சிங்கத்தை அதன் உரிமையாளரிடம் திரும்பி அளிக்க ஆணையிட்டார்.குட்டியாக இருந்தது முதலே, இந்த சிங்கத்தை, இதன் உரிமையாளர் அன்புடன் வளர்த்து வந்ததால், விதிவிலக்காக, இந்த சிங்கத்தை, அவரிடம் ஒப்படைக்கலாம் என்று முகநூல் பதிவில் ஹன் சென் கூறியிருந்தார்.ஆனால் இதன் உரிமையாளர், இந்த சிங்கத்தை கூண்டில் அடைத்து, இதர மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படமால் வளர்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.சிங்கத்தை திரும்பி பெற்ற உரிமையாளர் குவோ, அதற்காக பிரதமர் ஹன் சென்னுக்கு மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துள்ளார். வளர்ந்த வீட்டிற்கு வந்த மகிழ்ச்சியில் சிங்கமும் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்