விண்வெளி நடைபயணத்தை முடித்த வீரர்கள் - பூமியை படம் பிடித்த அதிநவீன கேமரா

விண்வெளியில், சீனா உருவாக்கி வரும் விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகள் பற்றி தற்போது பார்க்கலாம்
விண்வெளி நடைபயணத்தை முடித்த வீரர்கள் - பூமியை படம் பிடித்த அதிநவீன கேமரா
x
விண்வெளியில், சீனா உருவாக்கி வரும் விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகள் பற்றி தற்போது பார்க்கலாம்.பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு விண்வெளி நிலையத்தை சீனா உருவாக்கி வருகிறது. இதன் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள மூன்று விண்வெளி வீரர்கள், டியான்ஹெ பெட்டகத்தில் தங்கியுள்ளனர்.ட்ரெட் மில் மற்றும் இதர உபகரணங்கள் மூலம் இவர்கள் மூவரும் உடற்பயிற்சி செய்து, தங்களின் உடல நலத்தை பேணி வருகின்றனர். டியான்ஹு பெட்டகத்தில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கேமிரா மூலம் பூமியை படம் எடுத்துள்ளனர். மேகங்கள் சூழ்ந்த கடற் பரப்பு பகுதிகள் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து மிக அற்புதமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.ஸ்பேஸ் சூட் எனப்படும் பாதுகாப்பு உடை அணிந்த வீரர்கள்,  டியான்ஹு பெட்டகத்தில் இருந்து வெளியேறி, விண்வெளியில், கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர். மிக அபாயகரமான இந்த பணிகளில் பல மணி நேரங்கள் ஈடுபட்டு, டியாங்காங் விண்வெளி நிலையத்தின் உருவாக்கத்திற்கான முதல் கட்டப் பணிகளை மேற்கொண்டனர்.மிக பிரமாண்டமான, அதி நவீன இயந்திர கை ஒன்றை, இந்த பணிகளுக்காக பயன்படுத்துகின்றனர். இந்த இயந்திரக் கையில் பொருத்தப்பட்டுள்ள துல்லியமான கேமிராக்கள் மூலம் அனைத்து செயல்பாடுகளும் கணிக்காணிக்கப்பட்டு, துல்லியமாக செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.விண்வெளியில் முதற்கட்ட நடைபயணம் நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட பணிக்கு சீன வீரர்கள் தயாராகி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்