கொரோனா சிகிச்சைக்கு இவெர்மெக்டின் மருந்து - ஆக்ஸ்போர்ட் பல்கலை. நடத்தும் சோதனை

இவெர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தை கொரோனா நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாமா என்பது குறித்த ஆய்வை, பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் தொடங்கியுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு இவெர்மெக்டின் மருந்து - ஆக்ஸ்போர்ட் பல்கலை. நடத்தும் சோதனை
x
இவெர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தை கொரோனா நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாமா என்பது குறித்த ஆய்வை, பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் தொடங்கியுள்ளது.

பிரட்டன் அரசின் உதவியுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம், இவெர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி நோய் எதிர்ப்பு மருந்தை, கொரோனா நோயாளிகளுக்கு அளித்து, சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த சோதனைகளில், நோயாளிகளிடம் கொரோனா வைரஸ் இரட்டிப்பாகும் விதிகம் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் கூறியுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் கொரோனா நோயாளிகளுக்கு அஸித்ரோமைசின் மற்றும் டாக்ஸிசைக்ளின் மருந்துகள் அளித்து சோதனை நடத்தப்பட்டதில், இந்த மருந்துகள் பலன் அளிக்கவில்லை என்று கண்டறியப்பட்டது.

இவற்றைத் தொடர்ந்து நான்கு இதர மருந்துகள் சோதனை செய்யப்பட்டு, அதன் பின் தற்போது இவெர்மெக்டின் மருந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இவெர்மெக்டின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு அளிக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனமும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சுகாதார ஒழுங்குமுறை ஆணையங்கள் பரிந்துரை செய்துள்ளன.

ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில், கொரோனா நோய் சிகிச்சைக்கு இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவெர்மெக்டின் மருந்தை பிரட்டன் அரசுடன் இணைந்து பெரிய அளவில் சோதனை செய்து அதன் செயல் திறன் பற்றி விரிவான, வலுவான தரவுகளை கண்டறிய முயற்சி செய்யப்படுவதாக, ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் தலைமை ஆய்வாளர் கிரிஸ் பட்லர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்